aeaeae

aqaqaq

 

இன்றைய (03-03-2022) வகுப்புகளுக்கான 

கல்வி டிவி வீடியோக்கள்

1

வகுப்பு 1

CLICK HERE

2

வகுப்பு 2

CLICK HERE

3

வகுப்பு 3

CLICK HERE

4

வகுப்பு 4

CLICK HERE

  5

வகுப்பு 5

CLICK HERE

6

வகுப்பு 6

CLICK HERE

7

வகுப்பு 7

CLICK HERE


awawaw

இன்றைய (02-03-2022) வகுப்புகளுக்கான 

கல்வி டிவி வீடியோக்கள்

1

வகுப்பு 1

CLICK HERE

2

வகுப்பு 2

CLICK HERE

3

வகுப்பு 3

CLICK HERE

4

வகுப்பு 4

CLICK HERE

  5

வகுப்பு 5

CLICK HERE

6

வகுப்பு 6

CLICK HERE

7

வகுப்பு 7

CLICK HERE

NOW ONLINE

ararar

2021 ஆகஸ்ட் முதல் ஜனவரி 31-01-2022 வரை கல்வி டிவி வீடியோக்கள்












.

..

Wednesday, 12 June 2019

கண்களை குளமாக்கும் காட்சி..இறந்து போன குட்டியை ஊர்வலமாக தூக்கி சென்ற யானைக் கூட்டம்!

யானை கூட்டம் ஒன்று இறந்து போன குட்டியைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் சென்ற காணொளி வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்ப்பவர்கள் கண்கலங்கி நிற்பது உறுதி.
பொதுவாகவே மனிதர்களை விட ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கு பாசம் மற்றும் உறவு மீதான பிணைப்பு மிக அதிகம் என்பார்கள். அதிலும் குறிப்பாக யானைகளை எடுத்துக் கொண்டால் அவைகள் மற்ற விலங்குகளை காட்டிலும் முற்றிலும் வித்யாசம் குணம் கொண்டவர்கள். தனது கூட்டத்தில் வெளி நபர்களை அவ்வளவு எளிதாக நுழைய அனுமதிக்காது.
அதே போல் கூட்டமாக இருப்பது தான் தங்களின் பலம் என்பதை நன்கு அறிந்து எங்கு சென்றாலும் கூட்டமாகவே செல்லும்.
ஒருவேளை ஒரு யானை மட்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து சென்றால் மொத்த யானைக் கூட்டமும் அந்த யானையை தேடி அலையும்.
அந்த வகையில் கர்நாடகாவில் அரங்கேறியுள்ள மற்றொரு நிகழ்வு பார்ப்பவர்களையும் நெகிழ வைத்துள்ளது.இந்த நிகழவை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான.
அந்த வீடியோவில் யானைக் குட்டி ஒன்று இறந்து கிடக்கிறது. அந்த குட்டியை துதிக்கையால் தூக்கியபடி சாலையைக் கடந்து நிற்கிறது மற்றொரு பெரிய யானை. சில நொடிகள் கண்ணீருடன் காத்திருந்த வேளையில் அதன் பின்னால் 3 குட்டிகளுடன் மேலும் சில யானைகள் வந்து சாலையில் குழுமி நிற்கின்றன.
இறுதியாக மொத்த யானைக் கூட்டமும் கண்ணீருடன் இறுதி ஊர்வலம் செல்கின்றன. இந்த வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுவரை சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்கள் மட்டுமே இறுதி ஊர்வலம் செல்லும் பழக்கம் உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.